அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா.? வெளியான புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஒரு கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியான நிலையில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் குவித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 38 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது SK 20 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை ராஜ் கமல் பிளிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது வந்த புதிய தகவல் என்னவென்றால் SK 21 படத்திற்கு மாவீரன் என பெயர் வைத்துள்ளனர்.