சினிமா

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Summary:

sivakarthikeyan-is-the-official-announcement-of-success

தமிழ் சினிமாவில் விரைவில் வளர்ந்து வந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவருக்கு தற்போது "சீமராஜா" என்ற படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து "இன்று நேற்று நாளை" இயக்குனர் ரவிகுமாருடனும், இயக்குனர் எம்.ராஜேஷுடனும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது.

இந்நிலையில் தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனர் ஆர்.டி.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சொல்லியிருப்பது என்னவென்றால் “நல்ல பொழுதுபோக்கான படங்களை கொடுத்துவரும் இந்த அழகான பயணத்தில், இன்று உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடும், ஆதரவோடும் புரொடக்‌ஷன்ஸ் எண் 7வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று பதிவு செய்துள்ளார். 

மேலும் இயக்குனர் பி.எஸ்.மித்ரனும் தன் ட்விட்டர் இதனை தனது இணைய பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.


Advertisement