மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்! கண்கலங்கியே சிவகார்த்திகேயன்! வீடியோ!

மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்! கண்கலங்கியே சிவகார்த்திகேயன்! வீடியோ!


sivakarthikeyan-cries-at-zee-tamil-tv-show

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒரு மிமிக்கிரி கலைஞனாக அறிமுகமாகி தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும், சொந்த முயற்சியாலும் இந்த அளவிற்கு வளந்துள்ளார் சிவா.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக சீமராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தயாரித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

sivakarthikeyan

இந்நிலையில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பிறந்த மருத்துவமனையையும், அவரது அம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவரையும் ஒரு வீடியோவில் காட்டியுள்ளனர். மேலும் இங்கு எப்போதாவது சென்றுள்ளீர்களா என தொகுப்பாளினி அர்ச்சனா சிவாவிடம் கேட்க, நான் மிக பெரிய தவறு செய்துவிட்டேன். நிச்சயம் வரும் பொங்கல் விடுமுறையில் இங்கு செல்வேன் என கண்கலங்க கூறினார்.

பின்னர் அந்த மருத்துவரை அந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து சிவாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது ஜீ தமிழ். இதோ அந்த வீடியோ.