சினிமா

ரொம்ப கஷ்டமா இருக்கு.. முக்கிய பிரபலம் மறைவு! இரங்கல் தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு!!

Summary:

ரொம்ப கஷ்டமா இருக்கு.. முக்கிய பிரபலம் மறைவு! இரங்கல் தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் SK20 என்ற படத்தில் . நடிக்க உள்ளார்.

இப்படத்தை அனுதீப் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மேலும் SK 20 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாராயண்தாஸ் நரங் தயாரித்து வந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 650-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நிதியாளராக இருந்துள்ளார். 76 நிறைந்த அவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் அன்பான தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண்தாஸ் நரங்கின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையாக உள்ளது. ஏசியன் சுனில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஐயா அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement