சினிமா

அடேங்கப்பா.. அந்த படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு சம்பளமா?? செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

வெள்ளித்திரையில் இருந்து பலரும் சின்னத்திரையில் கால்பதித்து பெருமளவில் முன்னேறி வருகின்றனர

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் கால்பதித்து ஏராளமானோர் பெருமளவில் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக களமிறங்கி தனது திறமையால் முன்னேறி தற்போது முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் டாக்டர், அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் ரசிகர்களை வைத்து படம் இயக்குவது அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.

சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் சிறுவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதேபோல தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு படத்திற்கு சிவகார்த்திகேயன் இவ்வளவு சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. 


Advertisement