தான் எழுதும் பாடலுக்கு கறாராக சம்பளத்தை வாங்கும் சிவகார்த்திகேயன்! இதுதான் காரணமா?? நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

தான் எழுதும் பாடலுக்கு கறாராக சம்பளத்தை வாங்கும் சிவகார்த்திகேயன்! இதுதான் காரணமா?? நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!


sivakarthickeyan-salary-for-writing-song

துவக்க காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பு இருக்கும். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். அவர் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தில் எழுதிய 'எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சுடி' பாடல் செம ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து பல பாடல்களை எழுதிய அவர் டாக்டர் படத்தில்  ‘செல்லம்மா செல்லம்மா' என்ற பாடலை எழுதியிருந்தார். மேலும் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து எனும் பாடலை புதிய ஸ்டைலில் எழுதியுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்காக சம்பளத்தை கறாராக கேட்டு பெற்றுகொள்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதற்கு காரணம், அவர் அந்த பணத்தை மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிடுவதாக கூறப்படுகிறது. முத்துக்குமார் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் இரு பாடல்களை எழுதியுள்ளார். மற்றபடி இருவருக்குமிடையே நெருங்கிய நட்பு கிடையாது. இந்நிலையில் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டி வருகின்றனர்.