சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்.! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்.! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! என்ன தெரியுமா?


sivakarthickeyan-next-movie-detail-viral-XMGDPA

தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டு தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அப்படத்திற்கு மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அஸ்வின் இணையும் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  ஆனால் சில காரணங்களால் அதனை வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது வரும் 8-ம் தேதி சிவகார்த்திகேயன் மற்றும் மடோன் அஸ்வின் இணையும் படத்திற்கான டைட்டில் உள்ளிட்ட அறிவிப்பை வெளியிடவுள்ளனராம். அதற்காக வீடியோவும் அண்மையில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.