சினிமா

பல கோடிகள் சம்பாதித்த நடிகர் சிவாஜி பணத்தை தொட்டதே கிடையாதாம்.! அதிகம் பார்த்ததும் இல்லையாம்.!

Summary:

Sivaji not even touch money kamal shared interesting maters about sivaji

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் நடிகர் கமலும், விஜய் சேதுபதியும் இன்று பேசிக்கொண்டனர். இந்த நிகழ்வில் பல சுவாரசியமான விஷயங்களை கமல் விஜய் சேதுபதியுடன் பகிர்ந்துகொண்டார்.

சிவாஜிக்கும் உங்களுக்கும் உள்ள அனுபவங்களைப் பற்றி கூறுமாறு விஜய் சேதுபதி கமலிடம் கேட்டப்போது, சிவாஜி அவர்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்கள் எனவும், அவர் பணத்தை தொட்டது கிடையாது எனவும் கூறினார். ஒருபடத்தின் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பிற்காக புது சில்லறை காசுகள் கொட்டப்பட்டிருந்ததாகவும், அதனை பார்த்த சிவாஜி இதுதான் புது நாணயங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம்.

ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு சில்லறை காசுகள் எப்படி அடையாளம் தெரியும் என பலரும் கிண்டலாக பேசியுள்ளன்னர். ஆனால், உண்மைலயே சிவாஜி அவர்கள் பணத்தை பணத்தை அதிகம் பார்த்ததில்லை எனவும் நானே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் அந்த பணத்தை கையால் வாங்கவில்லை எனவும் கமல் கூறியுள்ளார்.


Advertisement