Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!
Siragadikka Aasai Promo: மொத்தமாக முடிந்தது ஜோலி.. துணி துவைக்க பணம் கொடுத்த சுருதி.. அதிர்ச்சியில் வாடிப்போன மீனா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை (Siragadikka Aasai ) நெடுந்தொடர், 240 நாள்களை கடந்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. எஸ்.குமரன் இயக்கத்தில், கோமதி பிரியா, வெற்றி வசந்த், ப்ரீத்தா ரெட்டி, சல்மா அருண், சுந்தர்ராஜன் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் முத்து - மீனா தம்பதிகளை, மாமியார் விஜயா மற்றும் மூத்த மருமகள் ரோகினி ஆகியோர் சேர்ந்து வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.
மூத்த மருமகள் ரோகினி, இளைய மருமகள் சுருதி சேர்ந்து, நடுவுள்ள மருமகள் மீனாவை பல வகைகளில் துன்புறுத்தி வருகின்றனர். சுருதி குணத்தால் நல்லவர் எனினும், தான் செய்யும் சின்ன தவறுகளை உணராமல் இருக்கிறார்.
ரோகினி மற்றும் விஜயா ஆகியோர் எந்நேரமும் மீனாவை துன்புறுத்தும் எண்ணத்துடன் வேலைக்காரி போல நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடப்பு வாரத்திற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ப்ரோமோவில், சுருதி தனது துணிகளை சுத்தம் செய்ய மீனாவுக்கு பணம் கொடுக்க, அவர் ஒருகணம் அதிர்ந்துபோய் நீங்களும் என்னை வேலைக்காரியாகவே ஆக்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார்.
தொடர்ந்து அவர் பணம் கொடுத்துவிட, அப்பணத்தை மீனா தனது கணவர் முத்துவிடம் வழங்கி வருத்தத்தை தெரிவிக்கிறார். இதனால் அடுத்த வாரம் இவர்களின் இல்லத்தில் உண்டாகும் புயல் எப்படி சுழன்று அடிக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.