சினிமா

சிறப்பாக முடிந்த சிம்பு வீட்டு திருமணம்! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!

Summary:

Simbus brother kuralarsan wedding photos

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு என அணைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்தவர் நம்ம T ராஜேந்தர் அவர்கள். சினிமாவையும் தாண்டி அரசியலும் அதிக ஈடுபாடுடையவர். இவரது மகன்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவரது இன்னொரு மகன்தான் குறளரசன்.

குறளரசன் ஒரு இசை அமைப்பாளர். இது நம்ம ஆலு படத்திற்கு இசை அமைத்துள்ளார் குறளரசன். இந்நிலையில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துவந்த குறளரசன் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இந்நிலையில் குறளரசனுக்கும் அவர் காதலித்து வந்த நபீலா என்ற பெண்ணிற்கும் இடையே சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.

முக்கிய VIP களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மணமகளின் புகைப்படங்கள் எதுவம் இணையத்தில் வெளியாகவில்லை. பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள்கூட புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்டவில்லை.

இந்நிலையில் மணமக்களின் வீட்டார் சார்பாக ஒருசில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement