அச்சோ.. மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரே! உடல் எடையை குறைத்தது எப்படி? கண்கலங்கி சிம்பு வெளியிட்ட வீடியோ!!
அச்சோ.. மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரே! உடல் எடையை குறைத்தது எப்படி? கண்கலங்கி சிம்பு வெளியிட்ட வீடியோ!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், ஹீரோவாகவும் அவதாரமெடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது.
இதற்கு அவரது உடல் எடை பெருமளவில் அதிகரித்ததுதான் காரணம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சிம்பு கடினமான, தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு 105 கிலோவிலிருந்து 75 கிலோவிற்கு தனது உடல் எடையை குறைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் மாநாடு திரைப்படத்தில் மீண்டும் மாஸாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அண்மையில் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மிகவும் உடல் வேதனையுடன் சிம்பு உடற்பயிற்சி மேற்கொண்டு எடையைக் குறைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.