உலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு! குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!



simbu participate in world rose day

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உலக ரோஜா தினம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலும் பல பகுதிகளில் உலக ரோஜா தினம் அனுசரிக்கப்பட்டது.

இத்தகைய தினத்தில் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு கலந்துகொண்டுள்ளார். மேலும் அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தார்.

மேலும் அங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.