சினிமா

ரஜினி, அஜித்தால் சிம்புவுக்கு வந்த சோதனை! படம் வெளியாவதில் புது சிக்கல்!

Summary:

Simbu new movie releasing after pongal

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இய்குனார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதேபோபோல இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்ட, விசுவாசம் படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதால் சிம்புவின் படம் பொங்கல் முடிந்து தனி ஒரு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement