சினிமா

சிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை! அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா!

Summary:

சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் சிம்பு ஆசைப்பட்ட கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது சிலம்பரசன் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

‘மாநாடு’ படத்தின் போஸ்டர்களும் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிம்பு பார்முக்கு வந்து விட்டார் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் சிம்புவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு மினி கூப்பர் கார் வாங்க நொம்ப நாட்களாக ஆசையில் இருந்துள்ளாராம். இந்தநிலையில் சிம்புவுக்கு அவர் ஆசைப்பட்ட காரை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தார் அவரது தாயார் உஷா ராஜேந்தர்.

இதையடுத்து தன் மகன் ஆசைப்பட்ட மினி கூப்பர் காரை வாங்கி சிம்புவுக்கு பரிசளித்துள்ளார் அவரது தாயார் உஷா ராஜேந்தர். தனது தாயின் பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் தற்போது தனது புதிய காரில் தான் உலா வந்துக் கொண்டிருக்கிறாராம். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement