சினிமா

மாநாடு தீபாவளியா? காலி மைதானமா?.. ரசிகர்கள் கூறுவது என்ன?..!

Summary:

மாநாடு தீபாவளியா? காலி மைதானமா?.. ரசிகர்கள் கூறுவது என்ன?..!

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல, மாநாடு படம் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டது என்று ரசிகர்கள் வெற்றிக்குரல் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் "மாநாடு". கடந்த 2018 ஆம் வருடம் மாநாடு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து நவ. 25 ஆம் தேதியான இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னரும் பல்வேறு இடர்பாடுகள், சர்ச்சைகள் கிளம்பி இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ளது. 

இன்று திரையரங்கம் முழுவதும் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் அதிகாலை முதலாகவே குவிந்து, படத்தை வெற்றிப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினர். நள்ளிரவு முதல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திரையரங்குகள் களைகட்ட தொடங்கியது. ரசிகர்களின் கொண்டாட்டம் தொடர்பான விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படத்தில் ஈஸ்வரனை தவிர்த்து, பிற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெறுமா? என்ற கேள்வி எழுந்தாலும், வெங்கட் பிரபுவின் கைவண்ணத்தில் படம் உருவாகி இருப்பதால் கட்டாயம் படம் எதிர்பார்ப்பதை விட மேல் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது "வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்" சார்பில் தயாரித்து வழங்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமையும். இதனைத்தவிர்த்து, பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகரர், எஸ்.ஜெ சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல, படம் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டது என தெரிவித்து வருகின்றனர்.


Advertisement