புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
என்னது.. பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு காதலா? ஒரே வீட்டிலதான் இருக்காங்களா! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் சிம்பு. சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்தார். இந்த நிலையில் அப்படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் நிதி அகர்வாலுக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும், தற்போது இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையா? இல்லையா? என்பதை சிம்பு மற்றும் நிதி அகர்வால்தான் விளக்க வேண்டும்.