நடிகர் விஜய்யின் ரீல் தங்கச்சியிடம் பரதம் கற்றுக்கொண்ட சிம்பு! வைரலாகும் புகைப்படத்தால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு வந்தா ராஜா தான் வருவேன் என்ற திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார் ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு,
சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சிம்பு, உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். மேலும் இதற்காக அவர் உடற்பயிற்சி,விளையாட்டு, நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றை செய்துள்ளார். இந்நிலையில் சிம்பு பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளார். மேலும் அவருக்கு வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.