தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சிம்புவின் கட்டளையை மீறி தடாலடியாக ரசிகர்கள் செய்த செயல்!
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில் மேகா ஆகாஷ், மகத், கேத்தரீன் தெரசா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 1-ந் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்பட ரிலீசின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுத்து சந்தோசப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒண்டாய் வெளியிட்டார்.
இந்த வீடியோவை பலரும் கிண்டல் செய்ய தொடங்கியதால் படம் வெளியாகும்போது அதிகமான பேனர் வையுங்கள். கட் அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பால் ஊற்றுங்கள்” என கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் , நான் பாலை அண்டா அண்டாவாக காய்ச்ச்சி படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள் என்ற அர்த்ததிலேயே அவ்வாறு கூறினேன் என விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து சிம்புவின் படம் இன்று ரிலீசானது. மேலும் சென்னையில் சில தியேட்டர்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்நிலையில் சிம்பு பேனர் வைக்க வேண்டாம், பால் ஊற்ற வேண்டாம் என்று கூறியும் அதனை கேட்காத ரசிகர்கள் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரிய கட் அவுட்கள் வைத்து பால் ஊற்றினார்கள்.
மேலும் இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில் அண்ணனின் கோரிக்கையை ஏற்று, வழக்கமாக பட ரிலீசின் போது வைக்கப்படும் பேனர்களை விட குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அண்ணன் மீதுள்ள அளவற்ற அன்பாலேயே பேனர் வைத்தோம் என கூறியுள்ளார்.