அடேங்கப்பா.. இன்றும் ரசிகர்களை கவரும் சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

அடேங்கப்பா.. இன்றும் ரசிகர்களை கவரும் சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!


Sillunu oru kadhal movie vasool detail

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வாறு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில்  வெளியான அந்த திரைப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

surya

 இந்தப் படத்தில் இடம்பெற்ற முன்பே வா அன்பே வா பாடல் இன்றும் பலரது ஃபேவரைட் பாடலாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சில்லுனு ஒரு காதல் படம்  அப்பொழுதே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.