விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
உங்க கூகுள் பே நம்பர் அனுப்புங்க.. எலான் மஸ்க்கை கிண்டல் செய்த பிரபல தமிழ் நடிகர்.! வைரலாகும் பதிவு!!
அமெரிக்காவில் வசித்து வருபவர் எலான் மஸ்க். இவர் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் முன்னரே 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே ட்விட்டர் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடுவதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையில் அவர் ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர்(ரூ.660) கட்டணமாக செலுத்தவேண்டும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு எலான் மஸ்க் குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருங்கள். மாதம் 8 டாலர் கட்டணம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு கிண்டலாக நடிகர் சிபிராஜ்" உங்கள் கூகுள் பே நம்பர் அனுப்புங்கள்" என ரிப்ளை செய்து பதிவிட்டுள்ளார். இவரது பதிவு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022