கமல்ஹாசனை குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்.?

கமல்ஹாசனை குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்.?


Shuruthi has an latest interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

Shruthi

கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றிருக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

தற்போது தமிழ் திரைதுரையிலிருந்து விலகியிருக்கும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் அவரது தந்தையான கமலஹாசனை வைத்து திரைப்படத்தை இயக்க ஆசை இருக்கிறதா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

Shruthi

இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், "அவரை வைத்து என்னால் இயக்க முடியாது. என் அப்பாவிற்கு நிகராக திரைத்துறையில் வளர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவருடன் என்னால் மட்டுமல்ல யாராலும் போட்டியிட முடியாது" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.