வாவ்.. குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் இவர்தானா! குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளனர் பார்த்தீங்களா!!

வாவ்.. குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் இவர்தானா! குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளனர் பார்த்தீங்களா!!


Shruthika went thiruvannamalai with family

விஜய் தொலைக்காட்சியில் தற்போது குக் வித் கோமாளி 3வது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும்  நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு சிறுபிள்ளை போல ஜாலியாக, சிரித்து பேசி அனைவரையும் கவர்ந்தவர் ஸ்ருதிகா.

இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் ஆல்பம், தித்திக்குதே போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். ஸ்ருதிகா கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் வேற லெவல். அவர் அர்ஜுன் என்பவரை  திருமணம்  செய்துகொண்டு செட்டிலானார். அவர்களுக்கு நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதிகா தற்போது தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர் தனது விருப்பத்திற்குரிய இடம் திருவண்ணாமலை, அங்கு சென்றால் மனம் நிம்மதி அடையும் என குறிப்பிட்டுள்ளார் . இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.