சினிமா

அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு சந்தோசம்தான்.! முதன்முறையாக மனம்திறந்த ஸ்ருதி ஹாசன்! இதுதான் காரணமா!!

Summary:

shruthi hasan talk about her parents

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சதிரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் கமல் ஹாசன். அதனை தொடர்ந்து அவர் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர்  தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி  நடிகர் கமல்ஹாசனின் 65 -வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலக நாயகன் கமல் ஹாசனின் மனைவி சரிகா. இவர்களது மகள்கள் சுருதி ஹாசன், அக்க்ஷரா ஹாசன். இருவருமே சினிமாக்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பாகம்  பெற்றோர்கள்தான். ஆனால் எனது பெற்றோர்கள் ஒன்றாக இருந்தாலும் எனக்கு வலிதான்.ஏனெனில் இருவருமே மிகவும் அருமையான நடிகர்கள். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை விட நனறாக புரிந்து கொண்டு பிரிந்து சந்தோசமாக வாழ்வதே ரொம்ப நல்ல விஷயம். என்னை பொறுத்தவரையில்  என்னுடைய அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சிதான்.

நான் இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும் என பலமுறை நினைத்தேன். ஆனால், தற்போது பிரச்சனையே இல்லாமல் சந்தோசமாக உள்ளனர். அவர்களை சேர்த்தால் மீண்டும் சண்டை போட்டு கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். அதனால் நான் அதை செய்யவில்லை என வருத்ததுடன் கூறியுள்ளார்.


Advertisement