ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்!!

ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்!!


shruthi-haasan-latest-photo-viral

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன்  நடித்துள்ளார்  ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட அவர் தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 

shruthi haasan

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ருதி இடையில்  காதல்வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் ஸ்ருதி நடித்துவருகிறார்.மேலும் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அதில் அவர்  சற்று உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

shruthi haasan