நீங்க வெர்ஜின் பொண்ணா?? ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பதில்!!

நீங்க வெர்ஜின் பொண்ணா?? ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பதில்!!


shruthi-haasan-answer-to-fan-question

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் பிரபலமான அவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி தனது காதலுடன் நெருக்கமாக எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார்.

Shruthi

அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் சில்லியான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம், நீங்கள் வெர்ஜின் பெண்ணா என கேட்டுள்ளார். ஆனால் அந்த வார்த்தையில் ஸ்பெல்லிங் தவறாக இருந்த நிலையில், ஸ்ருதிஹாசன் அதை சுட்டிக்காட்டி முதலில் அந்த வார்த்தைக்கான ஸ்பெல்லிங்கை ஒழுங்காக தெரிந்து கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளார்.