ரசிகர்களுக்கு இலவசமாக யோகா கற்றுதரும் நடிகை ஸ்ரேயா! தீயாய் பரவும் வீடியோ!shreya-yoga-video-viral

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது இலவசமாக லைவ்வாக யோகா பயிற்சி தரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், தனது நண்பர் சர்வேஷ் சசி என்பவர் உருவாக்கியுள்ள சர்வா என்ற இலவச யோகா பயிற்சியளிக்கும் செயலி குறித்தும் தகவல்  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.