கோவிலில் நின்று இப்படி செய்யலாமா? ஒற்றைப் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!! எதனால் தெரியுமா??

கோவிலில் நின்று இப்படி செய்யலாமா? ஒற்றைப் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!! எதனால் தெரியுமா??


shreya with husband at thirupathi photo viral

தமிழ் சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்கள் உடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். 

shreya

இந்நிலையில், ஸ்ரேயா அண்மையில் தனது கணவருடன் திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனம்  மேற்கொண்டுள்ளார். தரிசனத்திற்கு பிறகு இருவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அப்பொழுது ஸ்ரேயாவின் கணவர் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் கோவில் தேவஸ்தானத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா? என பலரும் கேள்வியெழுப்பி அது சர்ச்சையானது.