சினிமா

நீ எப்படியிருந்தாலும் அழகுதான்மா.! துளிகூட மேக்கப் இன்றி வைரலாகும் குக் வித் கோமாளி ஷிவாங்கி புகைப்படம்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் கோமாளிகள் செய்யும் ரகளைகள்தான். அவை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

 இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டவர் ஷிவாங்கி. சிறுபிள்ளை போல அவர் செய்யும் சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைத்தது. போட்டியாளரான  அஸ்வினுடன் இவர் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். 
ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து அவருக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்நிலையில் ஷிவாங்கி துளி கூட மேக்கப் இல்லாமல் சிறுபிள்ளையை போல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நீ எப்படியிருந்தாலுமே அழகுதான்மா என வர்ணித்து வருகின்றனர். 
 

  


Advertisement