சினிமா

ப்பா.. நம்ம குக் வித் கோமாளி ஷிவாங்கி ஸ்கூல் படிக்கும்போது எப்படியிருக்காரு பார்த்தீர்களா! தீயாய் பரவும் சூப்பர் புகைப்படம்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் சிறுபிள்ளை போல அவர் செய்யும் சேட்டைகள் மற்றும் ரகளைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. 

 மேலும் அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். போட்டியாளரான  அஸ்வினுடன் இவர் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். ஷிவாங்கி ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவருக்கு தற்போது படவாய்ப்புகள் வரத்துவங்கியுள்ளது. அவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தனது சுட்டிதனத்தால் அனைவரையும் கவர்ந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்  ஷிவாங்கியின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் குட்டி பெண்ணாக செம க்யூட்டாக காணப்படுகிறார். 


Advertisement