வைகைப்புயல் வடிவேலுவுடன் இணையும் பிக்பாஸ் இளம்நாயகி! முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்!!

விஜய் டிவியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் ஹீரோயினாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன்4 ல் போட்டியாளராக கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார்.மேலும் ஷிவானிக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஷிவானி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்', பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வீட்ல விசேஷங்க, செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இது குறித்த எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், எனது மீம்ஸ் மற்றும் டிரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் சினிமாவில் நடிப்பது வரை. சாதனை நாயகன் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.