இந்தியன் 2 படத்தில், 2 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி செலவா?

இந்தியன் 2 படத்தில், 2 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி செலவா?


Shankar Spends 2 Crores For 2 Minutes Scenes In Indian 2 Movie

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். இவரது படங்கள் பெரும்பாலும் அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். தமிழ் சினிமாவில் தொழிநுட்பதின் பயன்பாடு குறைவாக இருந்த காலம் முதல் இன்றுவரை தனது படங்களில் பலவிதமான தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறார் சங்கர்.

Sankar

அதற்கு உதாரணம்தான் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 2 . 0 திரைப்படம். ரஜினி நடிப்பில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம்தான் தமிழ் சினிமாவின் அதிக பொருள் செலவில் உருவான முதல் படம்.

தற்போது உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் சங்கர். இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sankar

பொதுவாகா சங்கர் தான் இயக்கும் படங்களில் செட் அமைப்பதில் மிகவும் கவனமுடனும், அதிக பிரமாண்டமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அந்தவகையில் இந்தியன் 2 படத்தில் ஒரு செட் ரூ 2 கோடிக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது, மேலும் இந்த செட் படத்தில் 2 நிமிடம் மட்டுமே தான் வருமாம்.

இப்படி 2 நிமிட காட்சிக்கு ரூ 2 கோடி செலவு செய்வது ஷங்கருக்கு மட்டுமே சாத்தியம் என கூறி வருகின்றனர்.