காமெடி என்ற பெயரில் ஷாலு ஷம்முவை கடுப்பேத்திய போட்டியாளர்கள்! நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் பிரபலமாக காரணமாக இருந்த ஒரு மெகாஹிட் திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றே கூறலாம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க மதன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில்
காமெடி கேங்ஸ்டர்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சிக்கு நடிகை ஷாலு ஷம்மு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு காமெடி செய்வதாக நினைத்து போட்டியாளர்கள் ஷாலுவின் போட்டோஷுட் புகைப்படங்களை பார்த்து அதன் படி போஸ் கொடுத்துள்ளனர்.
அதேபோல் அந்த வரிசையில் ஷாலு மோசமான போஸான வேறும் பூக்களை மட்டும் வைத்து உடலை மறைத்து ஒரு போட்டோஷுட் புகைப்படத்தை போட்டுள்ளனர். அதனை பார்த்ததும் நடிகை ஷாலு ஷம்மு படுகோபமாகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் காட்சி வைரலாகி வருகிறது.
ஷாலு ஷம்முவை கடுப்பேத்தி Walkout பண்ண வெச்சிட்டாங்க காமெடி கேங்ஸ்டர்ஸ்!🚶♀
— Zee Tamil (@ZeeTamil) February 28, 2020
காமெடி கேங்ஸ்டர்ஸ்
வரும் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு#ComedyGangsters #ZeeTamil pic.twitter.com/JOS0Q1w3Tx