அடடே.. குடும்பத்துடன் பொன்னியின் செல்வனை கண்டுகளித்த ஷாலினி அஜித்குமார்..! இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிரனும்..!! 

அடடே.. குடும்பத்துடன் பொன்னியின் செல்வனை கண்டுகளித்த ஷாலினி அஜித்குமார்..! இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிரனும்..!! 


shalini-ajith-kumar-ponniyin-selvan-movie

 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் என அழைக்கப்படுபவர்கள் அஜித் - ஷாலினி. இவர்கள் அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து ஷாலினி தனது திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Shalini AjithKumar

இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். சினிமாதுறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஷாலினி, பின் கதாநாயகியாக சில படங்களில் நடித்தார். ஆனால் திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து முழுவதும் விலகி தனது குடும்பபொறுப்பை கவனித்து வருகிறார்.

Shalini AjithKumar

அத்துடன் ஷாலினி திரையரங்கிற்கு சென்று தனக்கு பிடித்த சில படங்களை காண்பது வழக்கம். அந்த வகையில் சென்னை சத்தியம் தியேட்டருக்கு நடிகை ஷாலினி அஜித்குமார், தனது குடும்பத்துடன் பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்காக வந்துள்ளார். சத்தமில்லாமல் அவர் வந்து சென்ற போதிலும், ரசிகர்கள் அவரை வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.