சினிமா

என்னது.. நடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா? வெளிவந்த தகவல்! பதறியடித்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ

Summary:

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஆபாச நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷ

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஆபாச நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவருக்கு இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தலாக சமைத்து, நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு ரசிகர்களுக்கு ஷகீலா மீதான பார்வை முற்றிலும் மாறி அவரை அனைவரும் மதிப்புடன் பார்க்க துவங்கினர்.  மேலும் நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்கள், கோமாளிகள் என அனைவரும் அவரை அம்மா, மம்மி என பாசமாக அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஷகிலா உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் செய்தியை பரப்பி உள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ஷகிலா தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் இறந்துவிட்டதாக சிலர் செய்திகளை பரப்பியதாக கேள்விப்பட்டேன். நான் ஆரோக்கியமாக, நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். யாரோ ஒருவர் கெட்ட செய்தியை பரப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்துள்ளது. அன்பு கிடைத்துள்ளது. செய்தியை பரப்பியவருக்கு நன்றி என கூறியுள்ளார்.


Advertisement