இனிமே அப்படியெல்லாம் சொல்லுவீங்களா.? செம ஸ்ட்ராங்காக முற்றுப்புள்ளி வைத்த ஷபானா! என்னனு பார்த்தீங்களா!!

இனிமே அப்படியெல்லாம் சொல்லுவீங்களா.? செம ஸ்ட்ராங்காக முற்றுப்புள்ளி வைத்த ஷபானா! என்னனு பார்த்தீங்களா!!


Shabana post image with her husband

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில், ஹீரோயினாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் ஷபானா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலித்து வந்தார். இருவரும் கடந்த நவம்பர் 11ம் தேதி மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

 இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவசரஅவசரமாக திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் அண்மை காலமாக  ஷபானா மற்றும் செழியன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

மேலும் ஷபானா மற்றும் ஆர்யன் இருவருமே இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.  இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது கணவர் செழியனுடன் பேசியுள்ளார். மேலும் இதற்கு முன்பு இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தனர். இதன் மூலம் அவர்கள் தங்களது விவாகரத்து குறித்த வதந்திக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.