செம்பருத்தி சீரியல் புகழ் நடிகருக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் கியூட் புகைப்படம்!!

தற்காலத்தில் திரைப்படங்களை விட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமைகளாகவே உள்ளனர்.
இவ்வாறு பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிங்கர்களிடையே பெருமளவில் பிரபலமான தொடர் செம்பருத்தி.மேலும் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடருக்கு ஏராளமான ரசியங்கற்களை பெற்று டிஆர்பியில் முதலிடம் பெற்றது.
செம்பருத்தி சீரியலில் கதாநாயகனான ஆதியின் நண்பராக நடித்திருந்தவர் ஷ்யாம்.இவர் சீரியல் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் ஒரு சில காரணத்தினால் திடீரென்று சீரியலை விட்டு விலகினார். ஆனால் அதுகுறித்து காரணம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.அதனை தொடர்ந்து அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா மட்டும் லட்சுமி ஸ்டார் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷ்யாம் மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியானது. மேலும் நான் அப்பாவாக போகிறேன் என அவர் மிகவும் மகிழிச்சியுடன் கூறியிருந்த நிலையில் அவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது குழந்தையை கையில் அணைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.