சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜிற்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன குழந்தை தெரியுமா.?வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!!



Serial actress Rashmi blessed with boby girl yesterday

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் ரசிகர்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். 

இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ராஷ்மி. ஆனால் அந்த சீரியலின் முதல் பாகம் காரணமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ராஷ்மி, ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜபார்வை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியல் முடிவுக்கு வந்த சமயத்தில் ராஷ்மி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.இந்நிலையில் தற்போது ராஷ்மி தனது இன்ஸ்ட்ராகிராமில் தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டு ஒரு குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.