"நான் பணத்துக்காக கல்யாணம் பண்ணனா?.. யாரு சொன்னா உங்களுக்கு?" - கொந்தளித்த சீரியல் நடிகை மகாலட்சுமி..!!

"நான் பணத்துக்காக கல்யாணம் பண்ணனா?.. யாரு சொன்னா உங்களுக்கு?" - கொந்தளித்த சீரியல் நடிகை மகாலட்சுமி..!!


serial-actress-mahalakshmi-angry-speech-about-her-marri

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை சில தினங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருப்பதியில் நடந்த திருமணத்தைப் பற்றி ரகசியமாக வைத்திருந்த நிலையில், முந்தைய நாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு கிளம்பும்போதும் நடிகர்களிடம் இது குறித்து கூறாது இருந்துள்ளார்.

இதன்பின்னர் திருமண போட்டோ வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவருக்கு திருமணம் எளிமையாக நடைபெற்றாலும், சென்னையில் பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ரவீந்தர் - மகாலட்சுமி திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து பலரும் கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். அத்துடன் தயாரிப்பாளர் என்பதால் பணம் அதிகமாக இருக்கும் என்று தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்தாரோ? என்றும் விமர்சித்தனர்.

தற்போது இதற்கு நடிகை மகாலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். மகாலட்சுமி கூறியதாவது, "அவர் வந்து என்னிடம் ப்ரபோஸ் செய்தபோது நான் வேண்டாம் என்று கூறினேன். மேலும் என்னை பற்றி எதுவும் தெரியாமல், என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் எனக் கூறினேன்.

tamil cinema

நான் பணத்தை பார்ப்பவர் அல்ல. பணத்தைப் பற்றி பார்ப்பதாக இருந்தால் முதலில் நான் தானே அவரிடம் ப்ரபோஸ் செய்திருக்க வேண்டும். நான் மனதை மட்டுமே பார்த்தேன்" எனக் கூறியிருக்கிறார். அத்துடன் ரவீந்தர் பேசும்போதும், "தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் பணம் வைத்திருக்கிறேனா?. 

பணம் வைத்துக்கொண்டு அழகாக நல்ல தோற்றத்தில் வேறு எந்த ஆணும் இல்லையா? என்னை ஏன் அவர் திருமணம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு அவரது வீட்டில் இருந்துதான் எனக்கு நகைகள் போட்டுள்ளார்கள். நான் எதுவும் போடவில்லை.

காதலிக்க தொடங்கியதில் இருந்து மகாலட்சுமி எனக்கு மாதந்தோறும் கிப்ட் வாங்கி கொடுத்திருக்கிறார். நான் இதுவரை அவருக்கு ஒரு கிப்ட் கூட வாங்கி கொடுத்ததில்லை என்று கூறியுள்ளது படுவைரலாகி வருகிறது.