தாயை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிரபல நடிகை.! ரகசியத்தை அம்பலப்படுத்திய தம்பி!!
தாயை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிரபல நடிகை.! ரகசியத்தை அம்பலப்படுத்திய தம்பி!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவி கிருபா. அவர் தற்போது தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தாய் ஸ்வாதி கிரிஜா சமீபத்தில் மதுரவாயல் காவல் நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளார்.அதில், என் மகள் தேவி கிருபா இறந்துவிட்டதாக நான் நினைத்துக்கொள்கிறேன். எனக்கு இனிமேல் ஒரு மகன் மட்டுமே உள்ளான் என தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேவி கிருபாக்காக நான் மிகவும் பாடுபட்டுள்ளேன். ஆனால், அவள் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். மேலும் அதனால் நான் தர்கா, கோவில் மற்றும் தெருக்களில் வாழ்ந்து வந்தேன்.தற்போது நான் ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது செலவை என்னுடைய மகன் கோகுல் மட்டும் தான் பார்த்துகிறான் என குற்றசாட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தேவி கிருபா கூறுகையில், நான் நடித்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என் அம்மா பொறுப்பில்லாமல் இஷ்டப்படி தேவையில்லாமல் செலவு செய்துள்ளார். நானும் அதனை எவ்வளவோ பொறுத்துக்கொண்டேன். பின்னர் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது செலவுகள் குறித்து கணக்கு கேட்டேன். அதற்காக அவர் சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தேவி கிருபா கூறியதையே அவரது தம்பி கோபியும் ஒப்புக்கொண்டுள்ளார்.