வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
"அந்த முன்னணி நடிகர் என்னை அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்தார்" பரபரப்பை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகையின் வாக்குமூலம்..
சின்ன திரையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வருவது சன் டிவி. இந்த சன் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ரிஹானா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரையில் பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பது தற்போது பெரும் பிரச்சனையாகி கொண்டு வருகிறது. சமீபத்தில் பாடகி சின்மயியும் மற்றும் பல பாடகிகள் சேர்ந்து கவிஞர் வைரமுத்து மீது அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டை மனம் திறந்து பேசியிருந்தனர்.
இதனையடுத்து தற்போது சின்னத்திரை நடிகை ரிஹானா ஒரு பேட்டியில், "வெள்ளி திரையில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது முன்னணி நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைத்து மிகவும் தொல்லை கொடுத்தார். நான் மறுத்ததால் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
அதன் பின்னரும் எனக்கு தொடர்ந்து போன் கால்கள் செய்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். இவ்வாறாக பேட்டியில் சின்னத்திரை நடிகர் மனம் திறந்து பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.