கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
முழுமதி அவளது முகமாகும்.. ஆஹா... எம்புட்டு அழகு...! நாயகி சீரியல் நடிகையா இது! வைரல் வீடியோ காட்சி!
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் குயூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா மாநிலம் ஆலப்புழாவில்தான்.
சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக உள்ளார். அந்த வகையில் புடவையில் "முழு மதி அவளது முகமாகம் " என்ற ரசனை உள்ள பாடலுக்கு போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.