இவங்கதானா!! நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் அம்மா அப்பாவை பாத்துருக்கீங்களா!! வைரலாகும் புகைப்படங்கள்..

இவங்கதானா!! நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் அம்மா அப்பாவை பாத்துருக்கீங்களா!! வைரலாகும் புகைப்படங்கள்..



serial-actor-vidhya-pradeep-birthday-celebration-photos

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் அவரது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். நாயகி சீரியலுக்கு முன்பாகவே சேவல், பசங்க 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சீரியல் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து வளர்த்த இவர் தற்போது தமிழ் சீரியல்கள், திரைப்படங்களில் கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக நடிகர் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

Nayaki serial

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கோளாகலமாக கொண்டாடிய அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகிவரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.