செம அழகு!! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?? அம்சமாக உள்ள அழகிய புகைப்படங்கள்!serial-actor-kaavyaa-latest-photo-9KE2RP

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா பட்டுப்புடவையில் அம்சமாக உள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.குடும்பக் கதையை மையமாகக் கொண்டு, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

முதலில் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டஸ் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஆர்ப்பரிக்கும் அழகில் பட்டுப்புடவையில் உள்ள அழகான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.....