சினிமா

நானும் வன்னியர்தான் ஆனால்.. நடிகர் சூர்யாவுக்கு பெரிய சல்யூட்! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!!

Summary:

நானும் வன்னியர்தான் ஆனால்.. நடிகர் சூர்யாவுக்கு பெரிய சல்யூட்! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!!

 இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். பழங்குயின மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.  அதே சமயம் சில எதிர்ப்புகளும் கிளம்பியது. 

இந்த நிலையில் இப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் 
1லட்சம் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கினர். இந்நிலையில் நானும் வன்னியர்தான். ஆனால், சூர்யாவிற்கு ஆதரவு அளிப்பேன் என கூறி பிரபல சீரியல் நடிகர் அருண்குமார் ராஜன் தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஜெய்பீம் படத்தில் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக, கஷ்டப் படுத்துவதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நானும் ஒரு வன்னியர்தான். வன்னியராக இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு எந்த தவறும் தெரியவில்லை. இந்தப் படத்தில் இருளர், சிறுபான்மையினர் வாழ்க்கையில் இழைக்கப்பட்ட அநீதி, அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் சூர்யா சார் மிக அழகாக பதிவு செய்துள்ளார். அவருக்கு பெரிய சல்யூட்.

மக்கள் அனைவரும் சமமானவர்கள். இந்தப் படத்தில் வரும் நல்ல விஷயங்களை பார்க்காமல், சில காட்சிகளை வைத்து மனசு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். இதற்காக சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் தருவதாக ஒருவர் கூறியுள்ளார் அது எந்த விதத்தில் நியாயம். இந்த படத்தில் சூர்யாவை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப்படம் இருளர் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தன்னால் முடிந்த நல்ல விஷயத்தை பிறருக்கு செய்யும் அவரோட மனசுதான் கடவுள். அந்த மனசை மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கஷ்டப்படுத்தாதீர்கள்.

சூர்யா சார் இந்த மாதிரியான சர்ச்சைகளால் உங்களது முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள். உங்களால் இந்த மாதிரியான பாசிட்டிவான மாற்றங்கள் நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு பல படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். நான் சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கிறேன் என அந்த வீடியோவில் அருண் கூறியுள்ளார்.

 


Advertisement