சினிமா

‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தொடரும் வெற்றிப்பயணம்... ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடலுக்கு நடனமாடும் நடனப்புயல்!!

Summary:

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடி உலகம் முழுக்க முணுமுணுக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடலுக்கு பிரபுதேவா - நிக்கி கல்ரானி நடனமாடியுள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞர்களும், கணவன் - மனைவியுமான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி கலந்து கொண்டனர். இதில், இறுதிப்போட்டியில் பங்கேற்று, முதல் பரிசையும் வென்றார் செந்தில் கணேஷ்.

செந்தில் ராஜலட்சுமி க்கான பட முடிவு

இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அனைவருமே இவர்களின் பாடல்களைப் பாராட்டினர். மேலும், சில இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாடுவதற்கு வாய்ப்பும் அளித்து வருகின்றனர்.

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டபடி, முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷுக்கு தன்னுடைய இசையில் பாட வாய்ப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அத்துடன், சிவகார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சீம ராஜா’ படத்தில், செந்தில் கணேஷ் ஒரு பாடலைப் பாட வாய்ப்பு தந்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

செந்தில் ராஜலட்சுமி க்கான பட முடிவு

அந்த வரிசையில், இசையமைப்பாளர் அம்ரீஷும் இணைந்துள்ளார். செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடி உலகம் முழுக்க முணுமுணுக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடலை, தன்னுடைய இசையில் பாடவைத்துப் பதிவு செய்துள்ளார் அம்ரீஷ். இந்தப் பாடல், பிரபுதேவா - நிக்கி கல்ரானி நடித்துவரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெறுகிறது. இந்தப் பாடலை, பொள்ளாச்சியில் 5 நாட்கள் படமாக்கியிருக்கின்றனர்.
 


Advertisement