சினிமா

பாகுபலியை மிஞ்சுமா சினேகாவின் இந்த படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Senega

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று பெயரெடுத்தவர் நடிகை ஸ்னேகா. மலையாளம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஆனந்தம், கண்ணத்தில் முத்தமிட்டாள், விஜய்யுடன் வசீகரா போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்தவர் வாய்ப்பு குறைவின் காரணமாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ள ஸ்னேகா, வேலைக்காரன் படம் மூலம் தமிழில் சினிமாவில் மீண்டும் நடித்திருந்தார்.

இந்நிலையில் பாகுபலி அளவிற்கு கன்னடத்தில் உருவாகிவரும் குருச்சேத்ரா என்ற படத்தில் திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். புராண கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதன் டிரைலர் கடந்த ஜூலை 7 ம் தேதி வெளியாகி 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்திருக்கிறது. இந்த ட்ரைலரில் யாரும் எதிர்பாராத அளவிற்கு பாகுபலி ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் அளவிற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ளார் நடிகை ஸ்னேகா. 

 

 


Advertisement