சினிமா

ரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம்! அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ !!

Summary:

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியத

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வருகிறது. இத்தகைய கொடூரதொற்றுக்கு சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது நடிகரும் , பிக்பாஸ் பிரபலமுமான சென்றாயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ட்ராயன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து சென்றாயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தனக்குக் கொரோனா டெஸ்டில் பாசிட்டிவ் என வந்துள்ளதாகவும், தற்போது வீட்டில் தனியறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், மனைவி மற்றும் குழந்தை பக்கத்து அறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பிக்பாஸ் பிரபலங்களான கேபிரில்லா மற்றும் ஆஜித் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement