"என் கனவு நிறைவேறிவிட்டது" சீதாராமம் பட நடிகையின் கனவு.. மனம் திறந்த நடிகை.?



Seetharamam actress mirunaal posted in instagram

பிரபலமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மிருனால் தாகூர். இவர் 'சீதாராமம்' திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களிடையே பிரபலமானார்.
இவர் 'சீதாராமம்' திரைப்படத்திற்கு முன்பு விளம்பர படங்களிலும் சில படங்களின் குணசித்த கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

Mrunal

ஆனால் 'சீதாராமம்' படத்திற்குப் பிறகு இவருக்கு ரசிகர் கூட்டம் பெருகியது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா, கௌதம் மேனன் என பல முக்கிய நடிகர்கள் அடித்து படம் மிகப்பெரிய ஹிட்டானது.

இது போன்ற நிலையில், தற்போது கேம்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பல நடிகைகள், நடிகர்கள் அசத்தலான உடையில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.

Mrunal

மேலும் இந்த விழாவில் 'சீதாராமம்' பட நடிகை மிருனால் தாகூர் கேம்ஸ் திரைப்பட விழாவில் கருப்பு நிற உடைகளில் அசத்தலாக கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "பகல் கனவிற்காக பள்ளியில் அடி வாங்கி இருக்கிறேன். இப்போது என் பகல் கனவையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.