வேற லெவல்! தனது காதல் கணவருக்காக நடிகை சீதா எப்படியொரு காரியத்தை செய்துள்ளார்!! வியந்துபோன ரசிகர்கள்!!

வேற லெவல்! தனது காதல் கணவருக்காக நடிகை சீதா எப்படியொரு காரியத்தை செய்துள்ளார்!! வியந்துபோன ரசிகர்கள்!!


seetha-shave-her-head-for-her-husband

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருபவர் பார்த்திபன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று, பல விருதுகளையும் வென்றது. நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சீதா நடித்திருந்தார். முதல் படத்திலேயே இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பார்த்திபன் மற்றும் சீதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. மேலும் அவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Seetha

இந்த நிலையில் காதலித்த காலங்களில் பார்த்திபனுக்காக நடிகை சீதா மொட்டை போட்டுக் கொண்ட தகவலை நடிகர் பாக்கியராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர், ஒருமுறை பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்தது. பல மருத்துவர்களை பார்த்தும் அது சரியாகவில்லை. இதனால் பயந்துபோன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போட்டுக் கொண்டார். இதனைக் கண்ட நான் இப்படி ஒரு மனைவியா? என ஆச்சரியப் பட்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படி இருந்த காதல் ஜோடி எப்படி பிரிந்தனர் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.