"கிளர்வோட்டம்" 96 பட இயக்குனரின் மெய்யழகனை கண்டு வாயடைத்து போய் சீமான் செய்த செயல்.!
96 திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் 27 வது திரைப்படம் தான் மெய்யழகன். இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதனை சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கிளர்வோட்டம்
இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் மொழி பெயர்த்தால் கிளர் ஓட்டம் என்று வரும். தமிழில் சினிமா தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்துவது அரிதிலும் அரிது. இந்த பட குழுவினர் கிளர்வோட்டத்தில் பங்கு பெற்ற பல வார்த்தைகளை தமிழில் குறிப்பிட்டு இருப்பது சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: முடிச்சி அவிழ்ந்தா மொத்தமா க்ளோஸ்.. யாஷிகாவின் போட்டோவால் ரசிகர்கள் குஷி.!
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இது குறித்து அறிக்கை வெளியீட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், "ஆடை வடிவமைப்பு, வண்ணக் கலவை, ஒலி கலவை என்று அனைத்து சினிமா வார்த்தைகளையும் தமிழில் படக்குழு பயன்படுத்தி இருப்பது மிகவும் சிறப்பானது.
மனதார வாழ்த்திய சீமான்
கிளர் ஓட்டம் என்ற சொல் எவ்வளவு சரியாக தமிழில் அமைந்துள்ளது என்பதை நினைத்து நான் வியக்கிறேன். இது போல பொருள் பதிந்த கலைச் சொற்கள் தமிழில் மட்டும் தான் இருக்கிறது. பிற மொழிகளை நீக்கினால் பல மொழிகள் இயங்க முடியாது.
ஆனால் பிற மொழிகளை நீக்கினாலும் கூட இனிதாக இயங்க வல்லது தமிழ் மட்டும்தான். இந்த ஒரு செயலுக்காகவாது இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா.? அபூர்வ புகைப்படம் வைரல்.!